கோவையில் ஆபாச படத்தில் நடித்ததாக கூறி மனைவியை தாக்கிய போலீஸ்காரர் மீது வழக்கு

ஆபாசப்படத்தில் நடித்ததாக கூறி மனைவியைத் தாக்கிய முன்னாள் போலீஸ்காரர் மீது கொலை மிரட்டல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


கோவை: கோவையில் ஆபாசப்படத்தில் நடித்ததாக கூறி மனைவியைத் தாக்கிய முன்னாள் போலீஸ்காரரிடம் போலீசார் விசாரணை செய்தனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சேர்ந்தவர் துர்காதேவி வயது 35, ஐ.டி ஊழியர்.

இவர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார் அதில் கூறியிருப்பதாவது:-

எனக்கு 2002-ஆம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்து பணியாற்றிய சேலத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் 44, என்பவருக்கும் திருமணம் நடந்தது. தற்போது அவர் பணியில் இல்லை.

எங்களுக்கு ஒரு மகன் உள்ளார். இரண்டு வருடங்களுக்குப் பின்னர் தான் எனது கணவர் ஏற்கனவே திருமணம் நடந்ததை மறைத்து என்னை இரண்டாவதாகத் திருமணம் செய்தது தெரிந்தது.

இதுகுறித்து நான் கேட்டபோது எனக்கும் எனது கணவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதையடுத்து நான் எனது கணவரைக் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு பிரிந்து பின்னர் நான் எனது மகனுடன் வசித்து வருகிறேன்.

இந்த நிலையில் கடந்த 3-ம் தேதி என்னை எனது கணவர் செல்போனில் அழைத்துப் பேசினார்.

ஆபாச படத்தில் நடித்துள்ளாய், இந்த வீடியோ என்னிடம் உள்ளது. அந்த வீடியோ உனக்கு வேண்டுமென்றால் கோவை காந்திபுரத்துக்கு வா என்றழைத்தார்.

அதிர்ச்சி அடைந்த நான் காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம் சென்றேன். அங்கு வைத்து வீடியோவை காண்பிக்குமாறு கேட்டேன். அப்போது எங்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அவர் பொது இடத்தில் வைத்து என்னைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.

ஆனால் அவரிடம் எந்த வீடியோவும் இல்லை அவர் வேண்டுமென்றே என்னை ஏதாவது வழக்கில் சிக்க வைப்பதற்காக இந்த செயலை செய்துள்ளார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

புகாரின் பேரில் மனைவியை அழைத்துத் தாக்கிய முன்னாள் போலீஸ்காரர் ஜெயக்குமார் மீது கொலை மிரட்டல் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Newsletter

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...

கோவை ESI மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணிபுறக்கணிப்பு; சுகாதார சேவைகள் பாதிப்பு.

கோவை சிங்காநல்லூர் ESI மருத்துவமனையில், பணிச்சுமை, ஆள்பற்றாக்குறை, PF நிதி வழங்காதது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுற...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

கோவை மோளப்பாளையம் அகழாய்வில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள், கடற்சங்கு மணிகள் கண்டுபிடிப்பு

கோவை மாவட்டம் மோளப்பாளையத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வில், இரண்ட...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: கைதான இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல்

கோவை அருகே 10 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக் மற்றும் அவரது...

Decomposed Male Body Recovered Near Canal in Coimbatore; Alandurai Police Investigate

The male body in decomposed state was recovered from a canal near Karamarathur Bus Stand in Coimbatore district. Prelimi...