கோவையில் பெண் மீது ஆசிட் வீசிய மர்ம நபர்கள் தப்பியோட்டம்

கோவையில் கணவரைப் பிரிந்து வாழ்ந்த பெண் மீது ஆசிட் வீசிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராதா மீது ஆசிட் வீசிய மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.


கோவை: கோவையில் கணவரைப் பிரிந்து வாழ்ந்த பெண் மீது ஆசிட் வீசிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

தர்மபுரியைச் சேர்ந்தவர் ஸ்டாலின் இவரது மனைவி ராதா வயது 34, இவர்களுக்கு 2-மகள்கள் உள்ளனர். ராதாவுக்கும் அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக ராதா தனது கணவரைப் பிரிந்து 8-மாதங்களுக்கு முன்பு கோவை வந்தார். பின்னர் அம்மன் குளம் பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்துத் தங்கி இருந்து கட்டிட வேலைக்குச் சென்று வந்தார்.

நேற்று மாலையில் வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பிய அவர் அந்த பகுதியில் உள்ள மளிகைக் கடைக்குப் பால் வாங்குவதற்காகச் சென்றார். பின்னர் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

வீட்டின் அருகே சென்றபோது இருட்டில் மறைந்திருந்த மர்ம நபர் திடீரென ராதாவின் மீது ஆசிட் வீசினார். இதில் ராதாவின் இடது பக்கம் முகம் தோள்பட்டை இடதுகை ஆகிய இடங்களில் காயம் ஏற்பட்டது.

இதனால் வேதனை ஏற்பட்டு வலி தாங்க முடியாமல் ராதா அலறித் துடித்தார். அந்த வழியாகச் சென்றவர்கள் ராதாவை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராதா மீது ஆசிட் வீசிய மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...