வால்பாறை பகுதியில் 17,636 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் விநியோகம்..!

திமுக பொறுப்பாளர் பால்பாண்டி தலைமையில் ஒவ்வொரு ரேஷன் கடைக்கும் சென்று பொருட்கள் சரியாக வினியோகிக்கப்படுகிறதா என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


கோவை: கோவை வால்பாறை பகுதியில் 17,636 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டது.

தமிழக அரசு தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பொருட்கள் தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவித்த நிலையில், கடந்த 4ம் தேதி தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பொங்கல் தொகுப்பு பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

அதற்குப் பின்னர், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு பகுதிகளிலும் நியாயவிலை கடைகள், ரேசன் கடைகள் மூலமாக பொருள்கள் விநியோகமும் செய்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் உள்ள 60 எஸ்டேட் மற்றும் வால்பாறை டவுன் பகுதியில் மொத்தம் 17 ஆயிரத்து 636 குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். 4ம் தேதி முதல் 48 நியாயவிலை கடைகளிலும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் ரேஷன் கடைகள் மூலமாக ஒவ்வொரு எஸ்டேட் பகுதிகளிலும் பொங்கல் பொருட்கள் அடங்கிய பொங்கல் சிறப்புத் தொகுப்பு பொருட்கள் மற்றும் முழுக் கரும்பு வழங்கப்பட்டது.



இதில், திமுக பொறுப்பாளர் பால்பாண்டி தலைமையில் ஒவ்வொரு ரேஷன் கடைக்கும் சென்று பொருட்கள் சரியாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வினியோகிக்கப்படுகிறதா என்று ஆய்வு செய்து பொருட்களை வழங்கினர்.



இன்று நடுமலை, கருமலை எஸ்டேட் பகுதியில் திமுக பொறுப்பாளர் பால்பாண்டி தலைமையில் செல்வம் செந்தில், டென்சிங் அன்பரசன், ஆசைத்தம்பி பாண்டியராஜ் மற்றும் கலை, மாரிமுத்து, தங்கவேல் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு பொங்கல் பொருட்களை வழங்கினர்.

Newsletter

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...