கோவை கிணத்துக்கடவு அருகே தின்னரை உற்றி தீக்குளித்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பெண் பலி..!

இவரது கணவர் ஞானபிரகாசுக்கு தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.



கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே தேவராயபுரம் பகுதியில் தின்னரை ஊற்றி தீக்குளித்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிணத்துக்கடவு அருகே உள்ள தேவராயபுரம் காட்டுசாலை பகுதியில் வசித்து வந்தவர் ஞானபிரகாஷ், விவசாயியான இவருக்கு ரோகினி (40) என்ற மனைவியும், அவினாஷ் (16) என்ற ஒரு மகனும் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த 1ம் தேதி காலை ரோகிணி மற்றும் கணவர் ஞானபிரகாசும் தனது தோட்டத்தில் பாத்திகட்டி கொண்டிருந்த போது பக்கத்து தோட்டத்தைச் சேர்ந்த சக்திசண்முகம் என்பவர் ரோகிணியையும் அவரது கணவர் ஞானபிரகாஷையும் கெட்டவார்த்தையால்

திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த ரோகிணி வீட்டிற்கு வந்து வீட்டில் இருந்த தின்னரை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.

இதனைக் கண்ட கணவர் ஞானபிரகாஷ், ரோகிணியை காப்பாற்ற முயன்றதில் ஞானபிரகாசும் காயம் அடைந்தார்.



இதனையடுத்து, இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு பொள்ளாச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு ரோகிணியையும், ஞானபிரகாசும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை ரோகிணி சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஞானபிரகாசுக்கு தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...