கோவை கிணத்துக்கடவு அருகே சாலையைக் கடக்க முயன்ற பெயிண்டர் கார் மோதி பலி..!

மேலும், விபத்தை ஏற்படுத்தி நிற்காமல் சென்ற காரை போலீசார் தேடி வருகின்றனர்.



கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே சென்றாம்பாளையம் பிரிவில் சாலையைக் கடந்த போது கார் மோதி பெயிண்டர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பெரியகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் சரஸ்வதி (55), இவரது மகன் பார்த்திபன் (31). பெயிண்டரான இவர் தனது நண்பர் பொள்ளாச்சி மரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பாரதி ஜோசபுடன் கிணத்துக்கடவு அருகே உள்ள சென்றாம்பாளையம் பகுதியில் பெயிண்ட் அடிக்கும் பணிக்கு வந்துள்ளார்.

பின்னர், பணியை முடித்து விட்டு நேற்று மாலை வீட்டிற்குச் செல்ல சென்றாம்பாளையம் பிரிவு அருகே வந்து போது பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற போது பொள்ளாச்சியில் இருந்து கோவை நோக்கி வந்த கார் பார்த்திபன் மீது மோதி நிற்காமல் சென்று விட்டது.



இதில் பலத்த காயம் ஏற்பட்ட பார்த்திபனை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலையே பார்த்திபன் பரிதாபமாக உயிரிழந்தார்.

பின்னர், சம்பவ இடத்திற்குச் சென்ற கிணத்துக்கடவு காவல்துறையினர் பார்த்திபன் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், விபத்தை ஏற்படுத்தி நிற்காமல் சென்ற காரை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...