கோவை கொடிசியா வளாகம் அருகே சாலை அமைக்க நில அளவை செய்யப்பட உள்ளது

கோயம்புத்தூர் மாநகராட்சி, கொடிசியா வர்த்தகக் கண்காட்சி வளாகத்தில் சாலை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், கையகப்படுத்தப்பட்ட நிலங்களைப் பற்றிய விவரங்களைக் கணக்கெடுக்க உள்ளதாகக் கோவை மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.


கோவை: நில உரிமையாளர்களும் திட்டமிட்டபடி சாலைகளை அமைக்க சாலைக்கு தேவையான பகுதிகளை நன்கொடையாக வழங்க தயாராக உள்ளனர்.

கோயம்புத்தூர் மாநகராட்சி, கொடிசியா வர்த்தகக் கண்காட்சி வளாகத்தில் சாலை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், கையகப்படுத்தப்பட்ட நிலங்களைப் பற்றிய விவரங்களைக் கணக்கெடுக்க உள்ளதாகக் கோவை மாநகராட்சி வட்டாரங்கள் கூறுகின்றது.

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலக அதிகாரிகள் கூறியதாவது:-

மாநகராட்சி வளாகம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிவாசிகள், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சிக்கு அளித்த மனுவை அடுத்து, கணக்கெடுப்பு தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சத்தியமங்கலம் சாலை, அவிநாசி சாலை, சித்ரா சந்திப்பிலும், விளாங்குறிச்சி சாலை அவிநாசி சாலைகளை இணைக்கும் காளப்பட்டி சாலைக்கு மாற்றாகச் செயல்படும் சாலையை மேம்படுத்த வேண்டுமெனப் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாலைகள் அமைக்க வேண்டும் கோரிக்கை வைக்கும் பொதுமக்கள் கூறியதாவது:-

சாலை அமைக்கும் திட்டமானது கொடிசியா மெயின் ரோட்டில் இருந்து அங்கு அமையப்பெற்றுள்ள தனியார்ப் பள்ளிக்கும் இடையில், வடக்கு நோக்கி என்ஆர்ஐ கார்டன், எஸ்.ஆர். அவென்யூ, கூட்டுறவு இ காலனி, சேரன் மாநகரை இணைத்து, மேற்கே விளாங்குறிச்சி ரோட்டிற்கு இணைக்கப்படுகிறது.

கிட்டத்தட்ட அனைத்து நில உரிமையாளர்களும் திட்டமிட்டபடி சாலைகளை அமைக்கச் சாலைக்குத் தேவையான பகுதிகளை நன்கொடையாக வழங்கத் தயாராக இருப்பதால், மாநகராட்சியின் பணி எளிதானது. மீதமுள்ள, நிலத்தை ஆக்கிரமித்த சிலர், மாநகராட்சி பணியைத் துவங்கும் பச்சத்தில் காலி செய்யத் தயாராக உள்ளனர்.

இதனால், மிகக் குறைவான நில உரிமையாளர்களிடம் மட்டுமே மாநகராட்சிக்கு நிலத்திற்கான விலையைப் பேச வேண்டியிருந்தது என்று கூறினார்.

Newsletter

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...