கோவை கிணத்துக்கடவு அருகே அரசுப்பேருந்து முன்பக்க சக்கரம் கழன்று சென்றதால் பரபரப்பு - பயணிகள் இல்லாததால் பெரும் விபத்து தவிர்ப்பு..!

பயணிகளை இறக்கி விட்டு பொள்ளாச்சியில் உள்ள போக்குவரத்து பணிமனைக்கு பேருந்தை ஓட்டி வந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.


கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே சென்றாம்பாளையம் பிரிவில் அரசுப்பேருந்து முன்பக்க சக்கரம் கழன்று சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பேருந்து நிலையத்திலிருந்து இன்று காலை 4b எண் கொண்ட அரசு பேருந்து பயணிகளுடன் கிணத்துக்கடவு அருகே உள்ள மெட்டுவாவி பகுதிக்கு சென்றது.

அங்கு பயணிகளை இறக்கி விட்டு மீண்டும் பொள்ளாச்சிக்கு பயணிகளை ஏற்றி வரும்போது நடுவழியில் பேருந்து பழுதாகி நின்றதாக கூறப்படுகிறது.

இதனால் பயணிகளை இறக்கி விட்டு பொள்ளாச்சியில் உள்ள போக்குவரத்து பணிமனைக்கு பேருந்தை ஓட்டி வந்தனர்.

அப்போது கோவை - பொள்ளாச்சி சாலை சென்றாம்பாளையம் பிரிவு அருகே வந்து கொண்டிருக்கும்போது திடீரென பேருந்தில் முன்பக்கமுள்ள இடதுபுற சக்கரம் கழன்று விழுந்தது.



இதனால் பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநர் நிலைதடுமாறி சாமர்த்தியமாக சாலையோரத்தில் பேருந்தை நிறுத்தினார்.

அரசுப்பேருந்து சக்கரம் கழன்று விழுந்த நேரத்தில் பேருந்தில் பயணிகள் யாரும் இல்லாத காரணத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.



இதையடுத்து, பொள்ளாச்சி போக்குவரத்து பணிமனையில் இருந்து வந்த ஊழியர்கள் பேருந்து சக்கரத்தை பொருத்தும் பணியில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...