பொள்ளாச்சியில் தென்னிந்திய அளவிலான பைக் பந்தயம் - 160 வீரர்கள் பங்கேற்பு..!

இந்த போட்டியில் ரூ. 1 லட்சத்து 75 ஆயிரம் ரொக்கப் பணம் மற்றும் வெற்றிக் கோப்பைகள் வழங்கப்பட்டது.


கோவை: கோவை பொள்ளாச்சியில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான பைக் பந்தய போட்டியில் 160 வீரர்கள் பங்கேற்றனர்.

திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடும் வகையிலும், பைக் பந்தய வீரர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், கோவை தெற்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மற்றும் இளைஞரணி சார்பில் தென்னிந்திய அளவிலான பந்தயம் பொள்ளாச்சி ஜோதிநகர் மைதானத்தில் நடைபெற்றது.



இதில் தமிழகத்தின் கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 160 பைக் பந்தய வீரர்கள் கலந்து கொண்டனர்.

11 வட்ட லேப்புகள் அமைக்கப்பட்ட மைதானத்தில் நோவெல் 4 ரவுண்டு, இந்தியன் ஓபன் 10 ரவுண்டு, லேடிஸ் கிளாஸ் 3 ரவுண்டு உள்ளிட்ட 8 பிரிவுகளில் பந்தயம் நடைபெற்றது.



போட்டியில் கலந்து கொண்ட வீரர்கள் சாதுரியமாகவும், வேகமாகவும் தங்களது பைக்குகளை லாவகமாக இயக்கியதைக் கண்டு ஆயிரக்கணக்கான இளைஞர்கள், பொதுமக்கள் கைதட்டி ஆரவாரம் செய்து வீரர்களை உற்சாகப்படுத்தினர்.

8 பிரிவுகளில் முதல் பரிசு பெற்ற வீரர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாயும், இரண்டாம் பரிசு பெற்ற வீரர்களுக்கு 6 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் பரிசு பெற்ற வீரர்களுக்கு நான்காயிரம் ரூபாய் என 1 லட்சத்து 75 ஆயிரம் ரொக்கப் பணம் மற்றும் வெற்றிக் கோப்பைகளும் வழங்கப்பட்டது.



பரிசளிப்பு விழாவில் கோவை முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் கலந்துகொண்டு வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

Newsletter

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...