தொண்டாமுத்தூரில் ஆட்டை கொன்று விழுங்க முயன்ற மலைப்பாம்பு

கோவை தொண்டாமுத்தூர் பட்டா காட்டில் ஆட்டுக்குட்டியை கொன்று, அதை விழுங்க முயன்ற 12-அடி மலைப்பாம்பை பிடித்த வனத்துறையினர், அதை பத்திரமாக அடர்ந்த வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.



கோவை: கோவை தொண்டாமுத்தூர் பட்டா காட்டில் 12-அடி மலைப்பாம்பு ஆட்டுக்குட்டியை விழுங்க இருந்தது.

கோவை தொண்டாமுத்தூர் அடுத்த வண்டிக்காரனூர் மணல்காடு என்ற பட்ட காட்டில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தனர். பின்னர் அதில் ஒரு ஆட்டுக்குட்டி காணாமல் போனது. அதை அருகில் உள்ள புதருக்குள் தேடிச் சென்றனர்.

பின்னர் அருகிலுள்ள பள்ளத்துக்குள் ஆட்டுக்குட்டியைச் சுற்றியவாறு மலைப்பாம்பு இருந்துள்ளதை பார்த்து, அதிர்ச்சியடைந்த ஆடு மேய்ப்பவர் உடனடியாக வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தார்.



விரைந்து வந்த பாம்பு பிடி வீரர் தன்ராஜ் மற்றும் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து புதருக்குள் இருந்த ஆட்டுக்குட்டியைப் பாம்பின் பிடியிலிருந்து மீட்டனர்.



இருந்தபோதிலும் ஆட்டுக்குட்டி இருந்தது.



பின்னர் மலைப்பாம்பு ஊருக்குள் வராமல் இருக்கவும் மேலும் குட்டிகளைக் கொள்ளாமல் தடுக்கவும் பாம்பைப் பத்திரமாகப் பிடித்தனர்.



பின்னர் மருதமலை ஆணை மடுகு என்ற வனப்பகுதிக்குள் 12-அடி கொண்ட மலைப்பாம்பைப் பத்திரமாக விட்டுச் சென்றனர். இந்த மலைப் பாம்பு கடந்த வாரங்களில் இரண்டு ஆட்டுக்குட்டி மற்றும் மயிலைக் கொன்று உணவாக உட்கொண்டது என்பது தெரியவந்தது.

மேலும் குடியிருப்பு பகுதி மற்றும் தோட்ட சாலைகள் அருகே இருப்பதால் ஆபத்து வரக்கூடும் என்று பாம்பைப் பத்திரமாக அடர்ந்த வனப்பகுதிக்குள் விட்டனர்.

Newsletter

வெள்ளலூரில் ரூ.46 இலட்சம் செலவில் வீடில்லா நாய்களுக்கான கருத்தடை மையம்: மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் Katta Ravi Teja IAS, வெள்ளலூர் குப்பைக் கிடங்கு வளாகத்தில் 15வது மத்திய நிதிக்குழு மானிய...

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...