கோவையில் புத்தாண்டு கொண்டாட்டம்- பாதுகாப்பு பணியில் 1,050 போலீஸார்

புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு கோவையில் 1,050 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்று கோவை மாநகர காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு கோவையில் 1,050 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்று கோவை மாநகர காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கோவை மாநகர காவல்துறை வெளியிட்ட செய்தி:-

புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். வணிக வளாகங்கள், உள்ளரங்கு பொழுதுபோக்கு இடங்கள் உள்ளிட்டவற்றில் பார்வையாளர்களுக்கான பதிவேடுகள் பராமரிக்க வேண்டும், உடல் வெப்பநிலை பரிசோதித்த பின்னரே மக்களை அனுமதிக்க வேண்டும்.

கோவை மாநகர காவல் துறையானது மக்கள் அதிகம் கூடும் 9-இடங்கள், 13-முக்கிய சந்திப்புகள், 66-வழிபாட்டுத் தலங்கள் ஆகியவற்றைக் கண்டறிந்து பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு, அவிநாசி சாலை, திருச்சி சாலை, பொள்ளாச்சி, தடாகம், பாலக்காடு சாலைகள், ரேஸ்கோா்ஸ் சாலை, மருதமலை, சத்தியமங்கலம் சாலை உள்ளிட்டவற்றில் ரோந்துப் பணிகள் மற்றும் பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

வெளியூரிலிருந்து நகருக்குள் நுழையும் 11-இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு நகருக்குள் வரும் அனைத்து வாகனங்கள் மற்றும் வெளியாட்கள் கண்காணிக்கப்பட உள்ளார்கள். இதுதவிர 44-இருசக்கர ரோந்து வாகனங்கள், 23-நான்கு சக்கர ரோந்து வாகனங்கள் ரோந்துப் பணியில் ஈடுபட உள்ளன.

பிரச்சினைகள் ஏற்படுத்துபவர்கள் குறிப்பாகப் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும். வாகன விபத்து உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்களில் பாதிக்கப்படுவோரை மீட்க நகரின் முக்கிய இடங்களில் 45-ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்படும்.

பாதுகாப்புப் பணியில் 1,050 போலீஸாா் ஈடுபடுத்தப்பட உள்ளனர். புகார்கள் குறித்து பொதுமக்கள், கட்டுப்பாட்டு அறை: 0422-2300970, 81900-00100, வாட்ஸ் ஆப்: 94981-81213 என்ற எண்களில் தகவல் தெரிவிக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

Newsletter

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...