ஈஷா சார்பில்‌ தமிழ்நாடு முழுவதும்‌ 150 இடங்களில்‌ இலவச யோகா வகுப்புகள்‌..!

இலவசமாக கற்றுக்கொடுக்கப்படும்‌ இப்பயிற்சியில்‌ 7 வயதிற்கு மேற்பட்ட அனைவரும்‌ கலந்து கொள்ளலாம்‌. யோகா செய்த முன்‌ அனுபவம்‌ எதுவும்‌ தேவை இல்லை.



கோவை: ஆரோக்கியமான, ஆனந்தமான தமிழகத்தை உருவாக்கும்‌ நோக்கத்தில்‌ ஈஷா அறக்கட்டளை சார்பில்‌ வரும் ஜனவரி 2, 3ம் தேதிகளில்‌ தமிழ்நாடு முழுவதும்‌ அனைவருக்கும்‌ இலவசமாக யோகா கற்றுக்கொடுக்கப்பட உள்ளது.

அதன்படி, வரும்‌ ஜனவரி 2, 3 ஆகிய தேதிகளில்‌ தமிழ்நாட்டில் சுமார்‌ 150-க்கும்‌ மேற்பட்ட இடங்களில்‌ இலவச யோகா வகுப்புகள்‌ நடைபெற உள்ளது. ஈஷா யோகா மையத்தால்‌ பயிற்சி அளிக்கப்பட்ட ஈஷா தன்னார்வலர்கள்‌ இவ்வகுப்பை நேரில்‌ நடத்த உள்ளனர்‌.

இவ்வகுப்பில்‌ சூர்ய சக்தி என்ற எளிய சக்தி வாய்ந்த யோக பயிற்சி கற்றுக்கொடுக்கப்படும்‌. இப்பயிற்சியை தினமும்‌ தொடர்ந்து செய்து வருவதன்‌ மூலம்‌ இதயத்தை பலப்படுத்தி உடலை சுறுசுறுப்பாக்கலாம்‌, உடலில்‌ நோய்‌ எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்‌.

இந்த சூர்ய சக்தி பயிற்சி குறித்து சத்குரு கூறும்‌ போது, உங்களுக்குள்‌ உள்ள சூரியனை நீங்கள்‌ தூண்டினால்‌, உங்கள்‌ உடல்‌ ஒளி வீசு பிரகாசிக்க துவங்கும்‌ என கூறியுள்ளார்‌.

இவ்வகுப்புகள்‌ ஜனவரி 2 மற்றும்‌ 3 தேதிகளில்‌ காலை 6.30 மணி - காலை 8.15 மணி, நண்பகல்‌ 11.30 மணி - 1.15 மணி, மாலை 5.30 மணி - 7.15 மணி என 3 நேரங்களில்‌ நடக்கும்‌. இதில்‌ ஏதேனும்‌ ஒரு நாள்‌ ஒரு நேரத்தை பங்கேற்பாளர்கள்‌ தேர்வு செய்து கொள்ளலாம்‌.

இலவசமாக கற்றுக்கொடுக்கப்படும்‌ இப்பயிற்சியில்‌ 7 வயதிற்கு மேற்பட்ட அனைவரும்‌ கலந்து கொள்ளலாம்‌. யோகா செய்த முன்‌ அனுபவம்‌ எதுவும்‌ தேவை இல்லை. உங்கள்‌ இருப்பிடத்திற்கு அருகில்‌ நடக்கும்‌ இவ்வகுப்பில்‌ பங்கேற்க Isha.co/SSRD என்ற இணையதளத்தில்‌ முன்பதிவு செய்வது அவசியம்‌. முன்பதிவுக்கு உதவி தேவைப்பட்டால்‌ 83000 99555 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம்‌.

Newsletter

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...