அவசர சிகிச்சை பிரிவில் குழந்தைகளுக்கு 15, பெரியவர்களுக்கு 25 என மொத்தம் 40 படுக்கைகளை ஏற்படுத்த சுகாதாரத்துறை உத்தரவிடப்பட்டுள்ளது.
கோவை: கோவை அரசு மருத்துவமனையில் குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு கூடுதல் அவசர சிகிச்சை பிரிவு தயார் நிலையில் வைக்க சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தாக்கம் சற்று குறைந்துள்ளது. இருப்பினும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையை மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
தற்போது டெங்கு பாதிப்பு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள்ளது.
இதன் ஒரு பகுதியாக, அரசு மருத்துவமனைகளில் கூடுதல் அவசர சிகிச்சை பிரிவுகளை ஏற்படுத்தி அவற்றை தயார் நிலையில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
அவசர சிகிச்சை பிரிவில் குழந்தைகளுக்கு 15, பெரியவர்களுக்கு 25 என மொத்தம் 40 படுக்கைகளை ஏற்படுத்த சுகாதாரத்துறை உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்து மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில்:-
அனைத்து விதமான இடர்பாடுகளையும் எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதன் ஒரு பகுதியாக அவசர சிகிச்சைப் பிரிவை ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. கூடுதல் அவசர சிகிச்சை பிரிவு விரைவில் தொடங்கப்படும் என்று தெரிவித்தார்.