நீலாம்பூர் அருகே புகையிலைப் பொருட்கள் விற்பனை: இரு மாநிலங்களைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் நீலாம்பூர் அருகே தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்த ராஜஸ்தான் மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த இருவரை சூலூர் காவல்துறையினர் கைது செய்தனர். ரூ.2.08 லட்சம் மதிப்புள்ள புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


Coimbatore: கோவை மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை பொருட்கள் உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கத்தை கட்டுப்படுத்த கோவை மாவட்ட காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், சூலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுவதாக சூலூர் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, ஜூலை 10 அன்று சூலூர் காவல் துறையினர் நீலாம்பூர் அருகே வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, சந்தேகத்திற்கிடமான முறையில் ஒரு நான்கு சக்கர வாகனத்தில் புகையிலைப் பொருட்கள் கொண்டு வரப்படுவது கண்டறியப்பட்டது.

காவல் துறையினர் உடனடியாக வாகனத்தை மறித்து சோதனையிட்டனர். அதில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தலராம் (31) மற்றும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த அப்துல் ரகுமான் (22) ஆகியோர் பயணித்தது தெரியவந்தது. வாகனத்தில் இருந்த 250 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மதிப்பு சுமார் ரூ.2 லட்சத்து 8 ஆயிரம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இரு நபர்களையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து புகையிலைப் பொருட்கள் மற்றும் அவற்றை கொண்டு வந்த நான்கு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். கைதான இருவரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து சூலூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மேல் விசாரணை நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...