கோவை புலியகுளத்தில் கொலை சாட்சியை மிரட்டிய நபர் கைது

கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கில், கோர்ட்டில் சாட்சி சொல்லக்கூடாது என்று செலின் என்பவரை வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்த சண்முகம் என்பவரை போலீசார் கைது செய்தனர்.


கோவை: கோவை புலியகுளத்தை சேர்ந்தவர் செலின்(68). இவரது மகன் லியோ மார்ட்டின் கடந்த 2019ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இன்பேன்ட் ராஜ் மற்றும் சண்முகம் (எ) விக்கு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இருவரும் ஜாமீனில் வெளியே வந்தனர். இது தொடர்பான வழக்கு கோவை கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நேற்று ஜூன்.24 செலின் தனது சகோதரி மகனுடன் பைக்கில் புலியகுளத்தில் உள்ள டிபன் கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை சண்முகம் வழிமறித்து தகராறில் ஈடுபட்டார். மேலும் கொலை வழக்கில் கோர்ட்டில் சாட்சி சொல்லக்கூடாது என கொலை மிரட்டல் விடுத்தார்.

பின்னர் இது குறித்து செலின் ராமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், போலீசார் கொலை மிரட்டல் வழக்குப்பதிவு செய்து அம்மன்குளம் கந்தசாமி லே-அவுட்டை சேர்ந்த கூலி தொழிலாளி சண்முகம் (எ) விக்கு(25) என்பவரை கைது செய்தனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...