திருப்பூர்: கொரோனா பாதிப்பிலிருந்து மக்கள் விடுபட, திருப்பூரில் வேட்டையன் சிவபெருமான் திருக்கோவிலில் 120 மணி நேரம் ஐந்து நாட்கள் என தொடர் நவகிரக மஹாயாகம் நடத்தப்படுகிறது.
திருப்பூர்: கொரோனா பாதிப்பிலிருந்து மக்கள் விடுபட, திருப்பூரில் வேட்டையன் சிவபெருமான் திருக்கோவிலில் 120 மணி நேரம்
ஐந்து நாட்கள் என தொடர் நவகிரக மஹாயாகம் நடத்தப்படுகிறது.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட போயம்பாளையம் பகுதியில் சதாசிவம் நகரில் வேட்டையன் சிவபெருமான் திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் சிவபெருமான் முழு உருவத்துடன் வேடர் கோலத்தில் நின்றபடி அருள் பாலித்து வருகிறார்.
சமீபத்தில், திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்குதல் தீவிரம் அடைந்து வருவதால், இந்த கோவில் வளாகத்தில் சிவபெருமானின் மூன்றாம் கண் முன்பு கொரோனா பாதிப்பிலிருந்து திருப்பூர் மக்களை காப்பாற்றும் விதமாகவும், உலக மக்கள் கொரோனா நோயிலிருந்து விடுபட வேண்டியும் 120 மணி நேரம் ஐந்து நாட்கள் நவகிரகங்கள் உள்ளடக்கிய தொடர் மஹா யாக பூஜை தொடங்கி நடைபெற்று வருகிறது.

மஹா யாக பூஜை ஸ்ரீ சிவ சிவ மந்திர சுவாமிகள் தலைமையில் இன்று தொடங்கியது. இதில் சிவாச்சாரியார்கள், வேத மந்திரங்கள் உச்சரிக்க மஹா யாக பூஜை நடைபெற்று வருகிறது.
இந்த யாக பூஜையானது ஒவ்வொரு நாளும் சூரிய பகவான் உள்ளடக்கிய நவ கிரக தெய்வத்திற்கு சிறப்பு பூஜைகளும் தொடர்ந்து ஐந்து நாட்கள் நடைபெற்று கடைசி நாளன்று சிறப்பு பூஜைகளுடன் மஹா நவகிரக யாகம் நிறைவு பெரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த யாகத்தில் சிறப்பு அம்சமாக 108 சிவலிங்கங்கள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு வருகிறது.