நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காததால் கொரோனா நோய் தொற்று 500 ஐ கடந்துள்ளது.

மாவட்ட அலுவலகம் மற்றும் சிவில் சப்ளை அலுவலகம் உட்பட பல அரசு அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளது இதையடுத்து நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
"நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் அனுமதியின்றி விழாக்களை நடத்தியதால் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. ஊரடங்கு விதிகளை மீறி யாரும் விழாக்கள் நடத்த கூடாது", என தெரிவித்தார்.
மேலும், முககவசம் அணியாமல் வெளியில் வந்தாலோ, சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருந்தாலோ, அவர் தனி நபரோ அல்லது நிறுவனமோ, யாராக இருந்தாலும் நோய் தொற்று சட்டம் 1897 -ன் படி ஆறு மாதம் சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும், என்று எச்சரித்தார்.
குறிப்பாக, நோயை பரப்பும் வகையில் பொது இடத்தில் எச்சில் துப்பினால் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும், என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.