கோவை: சென்னை குடிநீர்கேன் உரிமையாளர்கள் தமிழக அரசை அணுகுகின்ற போது நீதிமன்ற உத்தரவிற்கு உட்பட்டு அவர்களுக்கு உதவ அரசின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க உரிய துறைகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
கோவை: சென்னை குடிநீர்கேன் உரிமையாளர்கள் தமிழக அரசை அணுகுகின்ற போது நீதிமன்ற உத்தரவிற்கு உட்பட்டு அவர்களுக்கு உதவ அரசின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க உரிய துறைகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனம், அலீம் கோ நிறுவனம் ஆகியவை இணைந்து மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மொத்தம் 947 நபர்களுக்கு 1487 உபகரணங்கள், மோட்டார் பொருத்திய மூன்று சக்கர சைக்கிள், பேட்டரி பொருந்திய சக்கர நாற்காலி, காதொலி கருவி, நவீன செயற்கை கால்கள், பார்வையற்றோர் பயன்படுத்தக்கூடிய உபகரணங்கள் போன்றவை வழங்கப்பட்டது. மொத்தம் ரூ.1 கோடியே 8 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கப்பட்டது. இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டியளித்தார்.
அப்போது, மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு தேவையான உபகரணங்கள் கொடுக்கப்பட்டது எனவும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவிகளை இந்த அரசு தொடர்ந்து செய்யும் என தெரிவித்தார். சென்னையில் குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம் நடத்தி வருவது தொடர்பான கேள்விக்கு, குடிநீர் கேன் விவகாரத்தில் நீதிமன்ற உத்திரவுபடி அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த அரசு செயல்படும் என தெரிவித்தார்.

மேலும், குடிநீர் கேன் உரிமையாளர்கள் அரசை அணுகுகின்ற போது அவர்களுக்கு நீதிமன்ற உத்தரவிற்கு உட்பட்டு இந்த அரசு உதவி செய்யும் என தெரிவித்த அவர், சென்னை மெட்ரோ, குடிநீர் வடிகால் வாரியம் ஆகியவற்றை அணுகுகின்ற போது குடிநீர் பற்றாக்குறையை போக்கவும் அரசின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.