தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச் சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையை முழுமையாக அமல்படுத்தி, சம்பவத்திற்கு பொறுப்பான அதிகாரிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என DYFI அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தது.
கோவை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்திய ஜனநாயக இளைஞர் கூட்டமைப்பு ( DYFI ) அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கடந்த 2018-ஆம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு, பின்னர் அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

ஆணையத்தின் பரிந்துரைகள் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை எனக் கூறி, DYFI அமைப்பினர் தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மனு அளித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவையிலும் பதாகைகளை ஏந்தி அவர்கள் மனு அளித்தனர்.
இதுகுறித்து DYFI கோவை மாவட்டச் செயலாளர் தினேஷ் ராஜா கூறுகையில், துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பொறுப்பான மாவட்ட நிர்வாகம், வருவாய்த் துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீது, ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் சட்டரீதியாகவும் துறைரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ₹50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பதையும் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை ஆணையம் அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக கீழ்நிலை காவல்துறையினரை மட்டும் பொறுப்பாக்கக் கூடாது என்றும், சம்பவத்தில் தொடர்புடைய உயர் அதிகாரிகளின் பங்கும் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையை முழுமையாக அமல்படுத்தி, சம்பவத்திற்கு பொறுப்பானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்தகட்டமாக பெரிய அளவிலான போராட்டங்கள் நடத்தப்படும் என DYFI தெரிவித்துள்ளது.
source: SimpliCity News Team