முன்னாள் கோவை தெற்கு பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், ஆந்திரப் பிரதேச மாநிலத்திற்கான பாஜக இணைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அரவிந்த் பதோரியா மாநிலப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மகிளா மோர்ச்சா தேசியத் தலைவர் பதவிக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து வானதி சீனிவாசனுக்கு இந்தப் புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
Coimbatore: முன்னாள் கோவை தெற்கு பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், ஆந்திரப் பிரதேச மாநிலத்திற்கான பாஜக இணைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாரதிய ஜனதா கட்சி (பாஜக), நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கான பொறுப்பாளர்கள் மற்றும் இணைப் பொறுப்பாளர்களை இன்று புதன்கிழமை அறிவித்தது. இதில், வானதி சீனிவாசன் ஆந்திரப் பிரதேசத்திற்கான இணைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அரவிந்த் பதோரியா அந்த மாநிலத்திற்கான பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கு முன்னதாக, வானதி சீனிவாசன் பாஜகவின் மகளிர் அணியான மகிளா மோர்ச்சாவின் தேசியத் தலைவராகப் பதவி வகித்து வந்தார். மகளிர் அணி தேசியத் தலைவர் பதவிக்காலம் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், அதைத் தொடர்ந்து ஆந்திரப் பிரதேசத்தில் இந்தப் புதிய அமைப்புப் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், வானதி சீனிவாசன் கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.