விளையாட்டு துறையில் மாற்று திறனாளிகளை ஊக்குவிக்கும் விதமாக சிற்றுளி பவுண்டேஷன் மற்றும் 'வீல் சேர் பெடரேஷன் ஆப் இந்தியா' இணைந்து நடத்திய மாற்றுத்திறனாளிகளுக்கான தென் மண்டல அளவிலான 'வீல் சேர்' கூடைப்பந்து போட்டி, பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரியில் நடைபெற்றது.
கோவை: விளையாட்டு துறையில் மாற்று திறனாளிகளை ஊக்குவிக்கும் விதமாக சிற்றுளி பவுண்டேஷன் மற்றும் 'வீல் சேர் பெடரேஷன் ஆப் இந்தியா' இணைந்து நடத்திய மாற்றுத்திறனாளிகளுக்கான தென் மண்டல அளவிலான 'வீல் சேர்' கூடைப்பந்து போட்டி, பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரியின் உள் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, பாண்டிச்சேரி உள்ளிட்ட 6 மாநிலங்களில் இருந்து பெண்கள் பிரிவில் 3 அணிகள், ஆண்கள் பிரிவில் 6 அணிகள் என மொத்தம் 9 அணிகள் இந்த போட்டியில் பங்கேற்றனர்.

விறு விறுப்பாக நடைபெற்ற இறுதி போட்டியில் ஆண்கள் பிரிவில், தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு அணியும் மோதி கொண்டதில், தமிழகம் முதலிடத்தையும், தெலுங்கானா இரண்டாவது இடத்தையும் பிடித்தது.

இதே போல, பெண்கள் பிரிவில் தமிழகம், கர்நாடக அணி மோதியதில் கர்நாடக முதல் இடத்தையும் தமிழகம் இரண்டாவது இடத்தையும் பிடித்தது. தொடர்ந்து, வெற்றி பெற்ற மாற்று திறனாளி விளையாட்டு வீரர்களுக்கு, மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் மற்றும் நடிகர் சதீஷ் கலந்து கொண்டு கோப்பைகள், சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கினர்.

"மாற்று திறனாளிகள் சிறு வயதில் இருந்து பல்வேறு சவால்களை கடந்து வந்துள்ளனர். இம்மாதிரியான போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் தான் நிஜத்தில் "ஹீரோ", என்று நடிகர் சதிஷ் புகழாரம் சூட்டினார்.