கோவை மருதமலை கோவிலுக்கு இரவு 7 மணிக்கு மேல் செல்ல தற்காலிக தடை - வனவிலங்கு நடமாட்டத்தை தொடர்ந்து கோவில் நிர்வாகம் நடவடிக்கை….!

வனத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டதில், வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதால் மருதமலை கோவிலுக்கு செல்ல இரவு 7 மணிக்கு மேல் பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக, கோவில் நிர்வாகத்தினர் அறிவித்துள்ளனர்.


கோவை: கோவை மருதமலை பகுதியில் இருந்து தடாகம் அனுபாவி சுப்பிரமணியர் கோவில் வரை உள்ள மலையை ஒட்டிய வனப்பகுதியில் காட்டு யானைகள், சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் வழக்கமாக இருக்கும்.

நேற்று நள்ளிரவு நேரத்தில் மருதமலை கோவில் தேர் நிறுத்துமிடம் மற்றும் ராஜகோபுரம் முன்பகுதியில் சிறுத்தை கடந்து சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.



இது குறித்து வனத்துறையினர் கூறும் போது, அப்பகுதியில் வழக்கமாக யானைகள், சிறுத்தைகள் கடந்து செல்வது வழக்கம். இருப்பினும், அங்கு வனத்துறை குழுவினர் தொடர் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த காலங்களில் 3 சிறுத்தைகள் ஒரே நேரத்தில் அப்பகுதியை கடந்துள்ளது. வன குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளதால், பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை, என தெரிவித்துள்ளனர்.

மேலும், மருதமலை கோவிலில் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டது தொடர்பாக கோவில் நிர்வாகத்தினர் கூறும் போது, வனத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டதில், வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதால் மருதமலை கோவிலுக்கு செல்ல இரவு 7 மணிக்கு மேல் பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக, அறிவித்துள்ளனர்.



மேலும், இதற்கான அறிவிப்பு பலகையை கோவிலில் பல்வேறு பகுதிகளில் பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...