கோவையில் ஓய்வு பெற்ற ஆட்சியர் உதவியாளர் வீட்டில் நகைகள் மாயம்…!

சம்பவம் தொடர்பாக அவர் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், வீட்டு வேலைக்கார பெண் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை குனியமுத்தூரை அடுத்த கோவைப்புதூரை சேர்ந்தவர் சொர்ணகுமாரி (78). இவர் கரூர் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். அவர்கள் திருமணமாகி வெவ்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர்.

கோவைப்புதூரில் தனியாக வசித்து வந்த சொர்ணகுமாரி, வீட்டு வேலையை கவனிக்க முடியாமல் சிரமப்பட்டுள்ளார். இதற்காக கடந்த மார்ச் மாதம் திருச்சியை சேர்ந்த கவிதா என்ற பெண்ணை வீட்டு வேலைக்கு சேர்த்தார். அந்த பெண் பணிக்கு சேர்ந்த 4 நாட்களில் சொந்த ஊருக்கு செல்வதாக கூறிவிட்டு சென்று விட்டார்.

சம்பவத்தன்று, சொர்ணகுமாரி வீட்டில் இருந்த பீரோ சாவியும் மாயமாகியிருந்தது. இதனால், சந்தேகமடைந்த அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பீரோவை திறந்து பார்த்த போது அதில் இருந்த 5 பவுன் தங்க நகை திருட்டுப் போயிருந்தது.

இதனால், அதிர்ச்சியடைந்த சொர்ணகுமாரி இச்சம்பவம் தொடர்பாக குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில், வீட்டு வேலைக்கார பெண் கவிதா மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...