கோவையில் நடைபயிற்சி சென்ற ஆசிரியையின் 3.5 தாலிச் செயின் பறிப்பு…!

நேற்று இரவு தனது மகளுடன் வழக்கமாக நடைபயிற்சிக்கு பாரதி பார்க் சாலை அருகே சென்றபோது, இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த இரு மர்ம நபர்கள் அவரின் கழுத்தில் அணிந்திருந்த 3.5 சவரன் தாலி செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.


கோவை: கோவை சாய்பாபா காலனி, அவிநாசிலிங்கம் கல்லூரி அருகே உள்ள ராமலிங்கம் காலனியை சேர்ந்தவர் கோமளவல்லி (47). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இந்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

வழக்கமாக, கோமளவல்லி தனது மகளுடன் தினமும் வீட்டின் அருகே நடைபயிற்சி மேற்கொள்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்த நிலையில், நேற்று இரவு தனது மகளுடன் கோமளவல்லி வழக்கமாக நடைபயிற்சிக்கு சென்றுள்ளார். அப்போது, பாரதி பார்க் சாலை அருகே சென்றபோது, இரு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் 2 பேர் அவரின் கழுத்தில் அணிந்திருந்த 3.5 சவரன் தாலி செயினை பறித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதனால் நிலைகுலைந்த கோமளவல்லி மற்றும் அவரது மகள் சத்தம் போடவே அங்கிருந்தவர்கள் தப்பிச் சென்ற நபர்களை பிடிக்க முயன்றனர். ஆனால், அவர்கள் கண் இமைக்கும் நேரத்தில் அந்த மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர். இதையடுத்து, சம்பவம் குறித்து கோமளவல்லி சாய்பாபா காலனி போலீசில் புகார் அளித்தார்.

புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தாலி செயினை பறித்துக் கொண்டு தப்பி சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...