முதல்வர் அறிவித்தபடி பணி வழங்காவிட்டால் வரும் 8ம் தேதி சென்னையில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று பொள்ளாச்சியில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மக்கள் நலப் பணியாளர்கள் அறிவித்துள்ளனர்.
கோவை: தமிழ்நாடு மக்கள் நலப் பணியாளர்கள் சங்கத்தின் கோவை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று பொள்ளாச்சியில் நடைபெற்றது.

இச்சங்கத்தின் மாநில அமைப்புச் செயலாளர் ரத்தினசாமி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கடந்த அதிமுக ஆட்சியின் போது நீக்கப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்தார். முதல்வர் அறிவித்து இரண்டு மாதங்கள் ஆகியும் இதுவரை பணி வழங்கப்படவில்லை. வயது முதிர்வு காரணமாக மக்கள் நலப் பணியாளர்கள் இறக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே மக்கள் நலப் பணியாளர்களுக்கு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3ம் தேதி பணி வழங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இல்லை என்றால் ஜூன் 8ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் நலப் பணியாளர்களை ஒன்று திரட்டி சென்னையில் பணி வழங்கும் வரை காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று மக்கள் நலப் பணியாளர் சங்க மாநில அமைப்புச் செயலாளர் ரத்தினசாமி தெரிவித்தார்.