கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் மரக்கிளை முறிந்து அரசு பேருந்து மீது விழுந்ததில் கண்ணாடி சேதம்

பேருந்து நிலையத்தில் இருந்த நாவல் மரத்தின் கிளை முறிந்து பேருந்தின் மீது விழுந்ததில், பேருந்தின் முன்பகுதி கண்ணாடி சேதமடைந்தது. சம்பவம் நடந்த இடத்தில், பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.


கோவை: கோவை காந்திபுரம் உள்ளூர் பேருந்து நிலையத்திலிருந்து ஏராளமான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இன்று கோவை காந்திபுரத்தில் இருந்து வாளையார் வரை செல்லும் 96-எண் அரசுப்பேருந்து காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படத் தயாரானது.

அப்போது, பேருந்து நிலையத்தில் இருந்த நாவல் மரத்தின் கிளை ஒன்று முறிந்து பேருந்தின் மீது விழுந்தது. இதில், பேருந்தின் முன்பகுதி கண்ணாடி சேதமடைந்தது. சம்பவம் நடந்த இடத்தில், அதிர்ஷ்டவசமாக பொதுமக்கள் மற்றும் பயணிகள் யாரும் அங்கு இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

இதையடுத்து, அங்கு விழுந்த மரக்கிளைகள் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். பின்னர், அங்கிருந்து பேருந்து புறப்பட்டது. எதிர்பாராதவிதமாக, பேருந்து மீது மரக்கிளை முறிந்து விழுந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Newsletter

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...