கோவை மருதமலை கோவிலில் உலாவரும் சிறுத்தை பக்தர்கள் பீதி…!

நள்ளிரவு நேரத்தில் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, உடனடியாக அந்த சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடித்து வனப்பகுதியில் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.



கோவை: கடந்த சில தினங்களாக கோவை மருதமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு நேரங்களில் சுற்றித்திரியும் தெருநாய்கள் மாயமானதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து வந்தனர். மேலும், மாயமான நாய்களை சிறுத்தை இழுத்துச் சென்றதா? என்ற பயத்தில் மக்கள் இருந்து வந்தனர். இது குறித்து வனத்துறையினர் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கையும் வைத்தனர்.

இந்த சூழலில், கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் வளாகத்தில் சிறுத்தை ஒன்று உலா வரும் காட்சிகள் கோவிலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. கோவிலில் தங்கத்தேர் நிறுத்துமிடம் மற்றும் ராஜகோபுரத்தின் முன்பகுதி வாயிலுக்கு அருகே உள்ள பகுதியில் நடந்து செல்லும் சிறுத்தையின் காட்சிகள் பதிவாகியுள்ளது.

நள்ளிரவு நேரத்தில் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது. எனவே, உடனடியாக அந்த சிறுத்தையை கூண்டு வைத்துப் பிடித்து வனப்பகுதியில் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...