ஈமூ கோழி மோசடி வழக்கு: தனியார் நிறுவன உரிமையாளருக்கு 3 ஆண்டு சிறை; ரூ.2.6 கோடி அபராதம் - கோவை “தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு நீதிமன்றம்” தீர்ப்பு…!

அம்மன் ஈமு பார்ம் நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான சிதம்பரத்திற்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2.6 கோடி அபராதமும் விதித்தும், அபராத தொகையில் ரூ.2 கோடியை முதலீட்டாளர்களுக்கு பிரித்து வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.


கோவை: ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியை சேர்ந்தவர்கள் செந்தில் நாதன் (37), சிதம்பரம் (40) ஆகிய இருவரும் இணைந்து கடந்த 2011-ம் ஆண்டு ஈரோடு மாவட்டம் விஜயமங்கலத்தில் அம்மன் ஈமு பார்ம்என்ற நிறுவனத்தை துவங்கியுள்ளனர்.

இந்த நிறுவனத்தில் முதலீடு செய்யும் பொதுமக்களுக்கு, 2 சலுகை திட்டங்களை அறிவித்தனர். அதன்படி, முதலாவது திட்டத்தில் ரூ.1½ லட்சம் முதலீடு செய்தால் 6 ஈமு கோழிகள் மற்றும் மாதம் ரூ.6 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் மற்றும்

ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் போனஸ் வழங்கப்படுவதுடன் 3 ஆண்டுகளில் முதலீட்டு தொகை திரும்ப வழங்கப்படும் எனவும் மற்றொரு திட்டத்தில் முதலீடு செய்தால் மாதம் ரூ.7 ஆயிரம் ஊக்கத்தொகையும், 24 மாதங்களில் முதலீட்டு தொகை திரும்ப வழங்கப்படும் என்று அறிவித்தனர்.

இதனை நம்பிய ஏராளமான பொதுமக்கள், இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். ஆனால், அறிவித்தப்படி அந்த நிறுவனம் பணம் வழங்காமல் சுமார் 129 பேரிடம் இருந்து ரூ.4.34 கோடி மோசடி செய்தனர். இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும், இந்த வழக்கு கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதனைடையே, ஈமு பார்ம்ஸ் நிறுவன உரிமையாளர்களில் ஒருவரான செந்தில் நாதன் வழக்கில் ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டார்.

இதையடுத்து அவர் மீதான குற்றச்சாட்டு பிரிக்கப்பட்டு தனி வழக்காக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த வழக்கில் நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான சிதம்பரத்திற்கு 3 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2.6 கோடி அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும், அபராத தொகை ரூ.2 கோடியை முதலீட்டாளர்களுக்கு பிரித்து வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...