அதன்படி, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு தன்னார்வலர்கள் மற்றும் சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் 70 க்கும் மேற்பட்டோர் இணைந்து கோவை மருதமலை பகுதியில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை சேகரிக்கும் களப்பணியில் ஈடுபட்டனர்.
கோவை: கோவையில் வனப்பகுதி மற்றும் மலை அடிவாரங்களில் சுற்றுலா செல்லும் பொதுமக்கள் பிளாஸ்ட் கழிவுகளை வீசிச் செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனால், சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதோடு, வனவிலங்குகளும் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகிறது.
இந்நிலையில், கோவை மாவட்ட வனத்துறை தன்னார்வலர்கள் பங்களிப்போடு வனப்பகுதியை ஓட்டியுள்ள இடங்களில் பிளாஸ்டிக் கழிவுகளை டன் கணக்கில் அகற்றி வருகின்றனர்.
அதன்படி, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு தன்னார்வலர்கள் மற்றும் சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் 70 க்கும் மேற்பட்டோர் இணைந்து கோவை மருதமலை பகுதியில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை சேகரிக்கும் களப்பணி இன்று ஈடுபட்டனர்.
இந்த களப்பணியில் சுமார் 500 கிலோ அளவிலான பிளாஸ்டிக் குப்பைகளைஅகற்றியுள்ளனர். சுற்றுச்சூழல் ஆர்வலர்களை தாண்டி மாணவ, மாணவியரும் இம்மாதிரியாக சமூக பணியில் ஈடுபடுவது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும், குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட மாணவர்கள் பிளாஸ்டிக் குப்பைகள் அப்புறப்படுத்துவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வுவை ஏற்படுத்தினர்.