கோவை மருதமலையில் 500 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றம் - தன்னார்வ அமைப்புடன் கைகோர்த்த மாணவர்கள்..!

அதன்படி, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு தன்னார்வலர்கள் மற்றும் சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் 70 க்கும் மேற்பட்டோர் இணைந்து கோவை மருதமலை பகுதியில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை சேகரிக்கும் களப்பணியில் ஈடுபட்டனர்.



கோவை: கோவையில் வனப்பகுதி மற்றும் மலை அடிவாரங்களில் சுற்றுலா செல்லும் பொதுமக்கள் பிளாஸ்ட் கழிவுகளை வீசிச் செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனால், சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதோடு, வனவிலங்குகளும் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகிறது.



இந்நிலையில், கோவை மாவட்ட வனத்துறை தன்னார்வலர்கள் பங்களிப்போடு வனப்பகுதியை ஓட்டியுள்ள இடங்களில் பிளாஸ்டிக் கழிவுகளை டன் கணக்கில் அகற்றி வருகின்றனர்.



அதன்படி, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு தன்னார்வலர்கள் மற்றும் சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் 70 க்கும் மேற்பட்டோர் இணைந்து கோவை மருதமலை பகுதியில் உள்ள பிளாஸ்டிக் குப்பைகளை சேகரிக்கும் களப்பணி இன்று ஈடுபட்டனர்.



இந்த களப்பணியில் சுமார் 500 கிலோ அளவிலான பிளாஸ்டிக் குப்பைகளைஅகற்றியுள்ளனர். சுற்றுச்சூழல் ஆர்வலர்களை தாண்டி மாணவ, மாணவியரும் இம்மாதிரியாக சமூக பணியில் ஈடுபடுவது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.



மேலும், குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட மாணவர்கள் பிளாஸ்டிக் குப்பைகள் அப்புறப்படுத்துவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வுவை ஏற்படுத்தினர்.



Newsletter

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...