கோவை தடாகம் அருகே காரில் கடத்திச் சென்ற 224.8 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் - ராஜஸ்தான் மாநில இளைஞர்கள் கைது.

கொரோனா காலத்தில் போதிய வேலை மற்றும் வருமானம் இல்லாததால், நண்பர் மூலம் பேசி பெங்களூரில் இருந்து குட்கா பொருட்களை வாங்கி சில்லரை விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை தடாகம் அருகே ரோந்தின் போது காரில் கடத்திச் சென்ற 224.8 கிலோ குட்காவை பறிமுதல் செய்த போலீசார், தடைசெய்யப்பட்ட போதை பொருளை கடத்தி வந்த ராஜஸ்தான் மாநில இளைஞர்களை கைது செய்தனர். 

கோவை தடாகம் அருகே போலீசார் வாகன சோதனையில் இன்றுஈடுபட்டிருந்தனர். அப்போது, கோவில்பாளையத்தில் இருந்து வந்த காரை நிறுத்தி சோதனையிட்ட போது, அதில் மூட்டை மூட்டையாக குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. 

இதையடுத்து குட்கா பொருட்களை கடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த லட்சுமணன் (22), மதன் சிங் (22), இந்தர் குமார் (24) ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். 



முதல்கட்ட விசாரணையில், லட்சுமணன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் குரும்பபாளையம் பகுதியில் மளிகை கடையில், மதன் சிங்குடன் வேலை பார்த்து வந்ததாகவும், கொரோனா காலத்தில் போதிய வேலை மற்றும் வருமானம் இல்லாததால், நண்பர் மூலம் பேசி பெங்களூரில் இருந்து குட்கா பொருட்களை வாங்கி சில்லரை விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக தெரிவித்துள்ளார்.

இதற்காக மூவரும் கோவில்பாளையத்தில் அறை எடுத்து தங்கி, சுமார் 4 லட்சம் மதிப்பில் கார் ஒன்றை வாங்கி குட்கா விற்பனையில் ஈடுபட்டு வந்தது அம்பலம் ஆகியுள்ளது.



இதையடுத்து, அவர்களிடமிருந்த 224.8 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்த போலிசார் மூவரையும் கைது செய்து நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...