மின் மயானம் அமைக்க எதிர்ப்பு: கோவை கிணத்துக்கடவில் நடைபெறும் ஜமாபந்தியில் கிராம மக்கள் மனு..!

மின் மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிணத்துக்கடவு தாலுகா அலுவலகத்தில் நடைபெறும் ஜமாபந்தியில் கொண்டம்பட்டி கிராம மக்கள் மனு அளித்தனர்.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் ஜமாபந்தி இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.



இன்று கிணத்துக்கடவு உள் வட்டத்திற்கு உட்பட்ட கிணத்துக்கடவு நகரம், கொண்டம்பட்டி, கோதவாடி, சொக்கனூர், வடபுதூர், அரசம்பாளையம், உள்ளிட்ட 11 கிராமங்களுக்கு நடைபெற்றது.

இதில் கொண்டம்பட்டி கிராமத்திலிருந்து வந்த 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அப்பகுதியில் அமைக்கப்பட உள்ள மின் மயானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜமாபந்தி அதிகாரியான மாவட்ட வருவாய் அலுவலர் கலால்துறை இணை ஆணையர் சுபா நந்தினியிடம் கிராம மக்கள் மனு அளித்தனர்.



இதைப்போல் கோதவாடி கிராமத்தில் கால்நடை மருத்துவமனை, சமுதாயக்கூடம், எல்லை விரிவாக்கம், பேருந்து வசதி போன்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஊராட்சி மன்றத் தலைவர் ரத்தினசாமி மற்றும் துணைத் தலைவர் பரமசிவம் ஆகியோர் மனு அளித்தனர்.



இன்று 11 கிராமங்களுக்கு ஒரே நாளில் ஜமாபந்தி நடைபெறுவதால் தாலுகா அலுவலகத்தில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

இதனால் கிணத்துக்கடவு காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் உதவி ஆய்வாளர் கருப்பசாமி பாண்டியன் ஆகியோர் தலைமையில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...