கோவையில் இரண்டு மாதத்தில் 1378 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1516 பேர் கைது - மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன் தகவல்….!

கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் கடந்த இரண்டு மாதங்களில் திருடப்பட்ட சுமார் ரூ.19.50 லட்சம் மதிப்பிலான 130 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அதனை உரிமையாளர்களிடம் மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணனிடம் இன்று வழங்கினார்.


கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களில் திருடப்பட்ட சுமார் ரூ.19.50 லட்சம் மதிப்பிலான 130 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உரிமையாளரிடம் மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன் வழங்கினார்.



கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் கடந்த இரண்டு மாதங்களில் திருடப்பட்ட சுமார் ரூ.19.50 லட்சம் மதிப்பிலான 130 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அதனை உரிமையாளர்களிடம் மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணனிடம் இன்று வழங்கினார்.



இதையடுத்து, செய்தியாளரிடம் பேசிய எஸ்.பி கூறியதாவது: கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களில் நடந்த கொலை, ஆதாய கொலை, கொள்ளை, திருட்டு, நகை பறிப்பு, சிறார்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகள், போதைப் பொருட்கள் விற்பனை, மது விற்பனை, குண்டர் தடுப்பு சட்டம், சூதாட்டம், லாட்டரி விற்பனை மற்றும் செல்போன் திருட்டு போன்ற பல்வேறு குற்றச் சம்பவங்கள் தொடர்பாக 1378 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.



இவ்வழக்குகளில் தொடர்புடைய, 1516 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களில். 71 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் சம்மந்தப்பட்ட 97 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டும், அவர்களிடமிருந்து ரூ.17,12,830/- மதிப்புள்ள 172 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதே போல், 169 குட்கா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் சம்மந்தப்பட்ட 178 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டும் அவர்களிடமிருந்து ரூ.20,55,006/ மதிப்புள்ள 2678 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 1,192 மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் சம்மந்தப்பட்ட 1206 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டும் அவர்களிடமிருந்து 4900 லிட்டர் மதுபானங்கள் மற்றும் 24 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருட்டு வழக்குகளில் சம்மந்தப்பட்ட 37 திருட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டும், அவர்களிடமிருந்து ரூ.39.83 லட்சம் மதிப்புள்ள திருட்டு சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதே போல், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்கள் சம்மந்தமாக 25 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அதில் சம்மந்தப்பட்ட 30 குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.



மேலும், போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 2 குற்றவாளிகளுக்கு தலா 20 மற்றும் ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை 18 பெற்றுதரப்பட்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. போக்சோ சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்குகளில் 103 வழக்குகளுக்கு இறுதி அறிக்கை தாக்கல் செய்தும், 18 வழக்ககுகள் நீதிமன்ற கோப்புக்கு எடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மற்றும் சட்டம் ஒழுங்கிற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த 5 குற்றவாளிகள் மற்றும் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த 1 குற்றவாளி என மொத்தம் 6 குற்றவாளிகள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

கோவை மாவட்ட காவல்துறை சார்பாக 6 சைபர் கிரைம் விழிப்புணர்வு மற்றும் 119 குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான விழிப்புணர்வு கூட்டங்களும் நடத்தப்பட்டுள்ளது", என எஸ்.பி. பத்ரிநாராயணன் தெரிவித்தார்.

Newsletter

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...