இருவரையும் குண்டர் சட்டத்தின் உட்பிரிவான தடுப்புக் காவலில் வைக்க மாநகர காவல் ஆணையாளர் பிரதீப் குமார் உத்தரவிட்டார்.
கோவை: கோவை இளைஞர் கொலை வழக்கு தொடர்பாக இருவரை தடுப்புக் காவலில் அடைக்க மாநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி கோவை கெம்பட்டி காலனியை சேர்ந்த சந்தோஷ் குமார் (34). என்பவரை உக்கடம் முத்துமாரியம்மன் கோயில் அருகே வைத்து, சுரேஷ்குமார் (26), முத்துப்பாண்டி (23) ஆகிய இருவரும் தனது நண்பர்கள் உதவியோடு வெட்டிக் கொலை செய்தனர்.
இந்த வழக்கில் இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சுரேஷ்குமார் மற்றும் முத்துப்பாண்டி மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் கோவை மாநகர துணை ஆணையர் ஜெயச்சந்திரன் மற்றும் உக்கடம் சரக காவல் உதவி ஆணையாளர் பரிந்துரையின்படி சுரேஷ்குமார் மற்றும் முத்துப்பாண்டி ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தின் உட்பிரிவான தடுப்புக் காவலில் வைக்க மாநகர காவல் ஆணையாளர் பிரதீப் குமார் உத்தரவிட்டார்.
இதற்கான உத்தரவு ஆணை கோவை மத்தியச் சிறையில் உள்ள இருவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.