கோவை இளைஞர் கொலை வழக்கு: இருவர் தடுப்பு காவலில் அடைப்பு - மாநகர காவல் ஆணையாளர் உத்தரவு…!

இருவரையும் குண்டர் சட்டத்தின் உட்பிரிவான தடுப்புக் காவலில் வைக்க மாநகர காவல் ஆணையாளர் பிரதீப் குமார் உத்தரவிட்டார்.



கோவை: கோவை இளைஞர் கொலை வழக்கு தொடர்பாக இருவரை தடுப்புக் காவலில் அடைக்க மாநகர காவல் ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி கோவை கெம்பட்டி காலனியை சேர்ந்த சந்தோஷ் குமார் (34). என்பவரை உக்கடம் முத்துமாரியம்மன் கோயில் அருகே வைத்து, சுரேஷ்குமார் (26), முத்துப்பாண்டி (23) ஆகிய இருவரும் தனது நண்பர்கள் உதவியோடு வெட்டிக் கொலை செய்தனர்.

இந்த வழக்கில் இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சுரேஷ்குமார் மற்றும் முத்துப்பாண்டி மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால் கோவை மாநகர துணை ஆணையர் ஜெயச்சந்திரன் மற்றும் உக்கடம் சரக காவல் உதவி ஆணையாளர் பரிந்துரையின்படி சுரேஷ்குமார் மற்றும் முத்துப்பாண்டி ஆகிய இருவரையும் குண்டர் சட்டத்தின் உட்பிரிவான தடுப்புக் காவலில் வைக்க மாநகர காவல் ஆணையாளர் பிரதீப் குமார் உத்தரவிட்டார்.

இதற்கான உத்தரவு ஆணை கோவை மத்தியச் சிறையில் உள்ள இருவருக்கும் வழங்கப்பட்டுள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...