பொள்ளாச்சி உடுமலை சாலையில் சரக்கு வாகனம் மீது கார் மோதி விபத்து - மூதாட்டி உட்பட இருவர் பலி!

பொள்ளாச்சி உடுமலை சாலை ஊஞ்சவேலம்பட்டி அருகில் சாலையை கடக்க முயன்ற சரக்கு வாகனம் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் மூதாட்டி உட்பட 2 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



கோவை: கோவை அருகே உள்ள குரும்பபாளையம் பகுதியை சேர்ந்த 5 பேர் உடுமலையில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது பொள்ளாச்சியிலிருந்து உடுமலை சாலை ஊஞ்சவேலம்பட்டி அருகே சென்றபோது, சாலையை கடக்க முயன்ற சரக்கு வாகனம் மீது கார் மோதியது. அப்போது சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த 70 வயது மூதாட்டி மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரில் வந்த கோவையைச் சேர்ந்த கோதைநாயகம், மரகதவடிவு, மகாலட்சுமி, 7 வயது சிறுவன் மற்றும் காரை ஓட்டி வந்த கவியரசு ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.



அருகில் இருந்தவர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கோதைநாயகம் உயிரிழந்தார். படுகாயமடைந்த 4 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது தொடர்பாக, தொடர்பாக பொள்ளாச்சி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, உயிரிழந்த 70 வயது மூதாட்டி யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...