கோவை கிணத்துக்கடவு பகுதியில் உள்ள சூலக்கல் மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில் ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு பூச்சட்டி எடுத்து, அலகு குத்தி, தேர் வடம் பிடித்து இழுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே பிரசித்தி பெற்ற சூலக்கல் மாரியம்மன் கோவிலில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தேர் திருவிழா நடைபெறுகிறது.
இந்தாண்டுக்கான தேர்த் திருவிழா கடந்த 18ஆம் தேதி தொடங்கி நாள்தோறும் கிராம மக்கள் பூச்சட்டி எடுத்தும், அலகு குத்தியும் வழிபட்டு வந்தனர். மூன்று நாட்கள் நடக்கும் இந்த தேர் திருவிழாவின் முதல் நாளான இன்று 36 அடி உயரம் கொண்ட அலங்கரிக்கப்பட்ட தேரில் சிவப்பு பட்டு உடுத்தி அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தாள்.

இதையடுத்து தேர் வலம் இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கடந்த 15 நாட்களாக விரதமிருந்த பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்று தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். வீதிகளில் அசைந்தாடி வந்த தேர் மீது பக்தர்கள் வாழைப்பழம் வீசி பய பக்தியுடன் வழிபட்டனர். முதல் நாள் வலம் வந்த தேர் கிராமத்தில் கிழக்கு எல்லைப் பகுதியில் நிலை நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, மீண்டும் நாளை மற்றும் நாளை மறுநாள் தேர் திருவீதி உலா வருவது குறிப்பிடத்தக்கது.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.