'மக்களின் குறை தீர்க்கும் ஜமாபந்தி'- கோவையில் கிணத்துக்கடவு வட்டாட்சியர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு..!

இந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் இலவச வீட்டுமனை பட்டா, நத்தம் பட்டா மாறுதல், அடிப்படை வசதி, புதிய குடும்ப அட்டை, கழிப்பிட வசதி, பட்டா நகல் கேட்டு பொதுமக்கள் மனு அளித்தனர்.


கோவை: கிணத்துக்கடவு வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஜமாபந்தியில் கிராம மக்கள் மனு அளித்தனர்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு வட்டாட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் ஜமாபந்தி இன்று முதல் மே 31-தேதி வரை நடைபெறுகிறது.

முதல் நாளான இன்று வடசித்தூர் உள்வட்டத்திற்கு உட்பட்ட 9-கிராமங்களுக்கு நடைபெற்றது. இந்த ஜமாபந்தியில் மாவட்ட வருவாய் அலுவலர், கலால் துறை இணை ஆணையாளர் சுபாநந்தினி கலந்து கொண்டு கிராம மக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார்.

இந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் இலவச வீட்டுமனை பட்டா, நத்தம் பட்டா மாறுதல், அடிப்படை வசதி, புதிய குடும்ப அட்டை, கழிப்பிட வசதி, பட்டா நகல் கேட்டும் பொதுமக்கள் மனு அளித்தனர்.

இந்த ஜமாபந்தியில் பெறப்படும் மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு காணப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ஜமாபந்தியில் அனைத்துத்துறை சேர்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...