கோவை பூண்டி வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கு வந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் உயிரிழப்பு.

6 ஆவது மலையில் வந்த போது, தனக்கு உடல் நலம் சரியில்லை என தனது நண்பரிடம் கூறிய இளஞ்செழியன் மெதுவாக மலை இறங்கி வந்துள்ளார். பின்னர், 5 ஆவது மலை அருகே வந்த போது அவர் மயங்கி விழுந்து இறந்ததாக தெரிகிறது.


கோவை: கோவை பூண்டி வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்கு வந்த சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் 5 ஆவது மலையில் இறங்கிக் கொண்டிருந்த போது மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்தவர் இளஞ்செழியன் (55). இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன், தனது நண்பர் ராமமூர்த்தி என்பவருடன் சென்னையில் இருந்து கோவை வந்துள்ளார். பின்னர், செவ்வாய்க்கிழமை இரவு கோவை பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவரை தரிசிக்க இரவு மலை ஏறி, 7 ஆவது மலையில் உள்ள சுயம்புலிங்க ஆண்டவரை தரிசனம் செய்து விட்டு, மீண்டும் காலை 9 மணிக்கு கீழே இறங்கியதாக தெரிகிறது.

அப்போது 6 ஆவது மலையில் வந்த போது, தனக்கு உடல் நலம் சரியில்லை என தனது நண்பரிடம் கூறிய இளஞ்செழியன் மெதுவாக மலை இறங்கி வந்துள்ளார். பின்னர், மாலை 5 ஆவது மலை அருகே வந்த போது அவர் மயங்கி விழுந்ததாக தெரிகிறது. இதையடுத்து, அங்கு மலையேற்றத்திற்காக வந்த மருத்துவர் ஒருவர் அவரை சோதனை செய்த போது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து அங்கிருந்தவர்கள் ஆலாந்துறை போலீஸ் மற்றும் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, இளஞ்செழியன் உடல் அடிவாரத்திற்கு கொண்டுவரப்பட்டு, பிரேத பரிசோதனைகாக, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சம்பவம் தொடர்பாக ஆலாந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் பட்டியலின மக்களிடம் அரசு பேருந்தில் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

கோவையில் சாதிய தீண்டாமை புகார்: அண்ணாநகருக்கு 21-ம் எண் பேருந்து இயக்க அமைச்சர் வன்னி அரசு உத்தரவு

தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் அண்ணாநகரில் அரசு பேருந்தில் பட்டியலின மக்களிடம் சாதிய தீண்டாமை கடைப்பிடிக்கப்படுவதாக எழுந...

பல்சமய நல்லுறவு இயக்கத்தின் முன்னெடுப்பு: கோவை சுந்தராபுரத்தில் பொது நூலகம் திறப்பு

கோவை சுந்தராபுரம் அருள் கார்டனில் பல்சமய நல்லுறவு இயக்கம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய பொது நூலகத்தை, தமிழ்நாடு அரசின் மத...

உலக புகையிலை ஒழிப்பு தினம்: போத்தனூர்-வெள்ளலூர் பகுதியில் காவல்துறை விழிப்புணர்வு முகாம்

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை போத்தனூர் காவல் நிலையத்தின் சார்பில் வெள்ளலூர் குடியிருப்பு பகுதியில் போதைப்பொரு...

பேரூர் கோவிலில் ரூ.1.40 கோடி புதிய திருத்தேர்: பாலக்கால் பூஜையுடன் திருப்பணி தொடக்கம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் ரூ.1.40 கோடி மதிப்பீட்டில் புதிய திருத்தேர் அமைக்கும் திருப்பணிக்கான பாலக்கால் பூஜை நடை...

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...