கோவை கிணத்துக்கடவில் மேல்நிலை தொட்டி கட்ட பூமி பூஜை: எம்.எல்.ஏ.,செ.தாமோதரன் பங்கேற்பு..!

கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சொலவம்பாளையம் ஊராட்சி 7-வது வார்டில் 12-லட்சம் ரூபாய் மதிப்பில் மேல்நிலை தொட்டி கட்ட பூமி பூஜை நடைபெற்றது.


கோவை: கிணத்துக்கடவு சொலவம்பாளையத்தில் மேல்நிலை தொட்டி கட்ட நடைபெற்ற பூமி பூஜையில் எம்.எல்.ஏ., செ.தாமோதரன் பங்கேற்றார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சொலவம்பாளையம் ஊராட்சி 7-வது வார்டு உறுப்பினர் கவுன்சிலர் கிருஷ்ணவேணி சிவகுமார் நிதியிலிருந்து 12-லட்சம் ரூபாய் மதிப்பில் மேல்நிலை தொட்டி கட்டப்படுகிறது.



இந்த பணிகளுக்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. இதில் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ.தாமோதரன் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், மலுமிச்சம்பட்டி ஒன்றிய அதிமுக செயலாளர் சதீஷ்குமார், கிணத்துக்கடவு அதிமுக நகர செயலாளர் மூர்த்தி, கவுன்சிலர் கிருஷ்ணவேணி, சொலவம்பாளையம் ஊராட்சி தலைவர் சின்ராஜ், துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...