நூல் விலையை கட்டுப்படுத்தி, சட்டவிரோதப் பஞ்சு பதுக்கலை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 30-ம் தேதி திருப்பூரில் ரயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளதாக எஸ்டிபிஐ கட்சி அறிவித்துள்ளது.
திருப்பூர்: திருப்பூரில் தொடர்ந்து அதிகரித்து வரும் நூல் விலையேற்றத்தை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசைக் கண்டித்தும், உடனடியாக நூல் விலையை கட்டுப்படுத்தி, சட்டவிரோதப் பஞ்சு பதுக்கலை தடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 30-ம் தேதி திருப்பூரில் ரயில் மறியல் போராட்டம் நடத்த உள்ளதாக எஸ்டிபிஐ கட்சி அறிவித்துள்ளது.

எஸ்டிபிஐ கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் பஷீர் அகமது இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஒன்றிய பா.ஜ.க அரசின் தவறான பொருளாதார கொள்கையினால் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை, அத்தியாவசிய பொருட்கள் விலை ஏற்றம் ஏற்பட்டுள்ளது.
திருப்பூரில் தொடர் நூல் விலை ஏற்றம், வரைமுறையற்ற நூல் ஏற்றுமதி, சட்டவிரோத பஞ்சு பதுக்கல், காரணமாக திருப்பூரில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் வாழ்வாதாரமான பனியன் தொழில் பெரும் அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
அதற்குக் காரணமான ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து வரும் 30-ம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், திருப்பூரின் அண்டை மாவட்டங்களான ஈரோடு, கோவை, கரூர், சேலம் ஆகிய கொங்கு மண்டலங்களில் அனைத்து தொழிற் துறையினரையும் ஒருங்கிணைத்து நூல் விலையை குறைக்க SDPI கட்சியின் சார்பாக பெரும் தொடர் போராட்டங்களை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.