கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் இரு சக்கர வாகனம் சாலை தடுப்பில் மோதி விபத்து - ஐ.டி ஊழியர் பலி…!

கோவையில் வீட்டில் இருந்து வேலை செய்து வந்த ஐ. டி ஊழியர், துடியலூர் பகுதியில் நண்பர்களை பார்த்துவிட்டு மீண்டும் மேட்டுப்பாளையம் சாலையில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, பைக் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் தடுப்புச்சுவர் மீது மோதியதில் உயிரிழந்தார்.


கோவை: கோவையில் வீட்டில் இருந்து வேலை செய்து வந்த ஐ. டி ஊழியர், துடியலூர் பகுதியில் நண்பர்களை பார்த்துவிட்டு மீண்டும் மேட்டுப்பாளையம் சாலையில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, பைக் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டின் தடுப்புச்சுவர் மீது மோதியதில் உயிரிழந்தார்.

கோவை வெள்ளலூர் அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் சண்முகம் இவரது மகன் தீக்க்ஷித் (26). சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். தற்போது, வீட்டிலிருந்து வேலை செய்துவரும், தீக்க்ஷித் கடந்த சில மாதங்களுக்கு முன்பு துடியலூர் பகுதியில் குடியிருந்த நிலையில் தற்போது வெள்ளலூர் பகுதிக்கு வீடு மாற்றம் செய்துள்ளனர்.

இதனால், தீக்க்ஷித் தனது நண்பர்களை பார்ப்பதற்காக அடிக்கடி துடியலூர் சென்று வந்துள்ளார். நேற்று வழக்கம்போல், துடியலூர் சென்று தனது நண்பர்களை பார்த்துவிட்டு மீண்டும் மேட்டுப்பாளையம் சாலையில் தனது இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்த போது, இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே இருந்த தடுப்பின் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். அப்போது, அங்கிருந்த பொதுமக்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதிக அளவு ரத்தப்போக்கு ஏற்பட்டதால், அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்ற மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

இதையடுத்து, தீக்க்ஷித் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், அவர் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே பரிதாபமாக உயிர் இழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...