அரசு பள்ளிகளுக்கு 50 லட்சம் செலவில் இருக்கைகள், மேசைகள், பீரோ வழங்கிய வால்பாறை எம்.எல்.ஏ!

வால்பாறையில் அரசு பள்ளிகளுக்கு 50 லட்சம் செலவில் இருக்கைகள், மேசைகள், பீரோ போன்ற பொருட்களை எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி வழங்கினார்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் வாட்டர் பால்ஸ், ரொட்டிகடை, வால்பாறை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சோலையார் அணை மேல்நிலைப்பள்ளி போன்ற அரசு பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.

மாணவ மாணவிகளுக்கு வகுப்பறையில் இருக்கைகள் மேசைகள் பீரோ போன்ற பொருட்கள் பழுதாகி பயன்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்ட நிலையில் பள்ளி மாணவ-மாணவிகள் சிரமப்பட்டு வந்தனர்.

இதையடுத்து பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் வால்பாறை எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் கோரிக்கை மனு அளித்தனர். இந்நிலையில் கடந்த ஒரு வருடங்களாக எம்எல்ஏ மேம்பாட்டு நிதி வழங்கப்படாத சூழ்நிலையில் தற்போது பள்ளிகளுக்கு தேவையான பொருட்களை சட்டமன்ற உறுப்பினர் இன்று வழங்கினார்.



இதில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து 50 லட்சம் ஒதுக்கீடு செய்து மலைப்பகுதியில் உள்ள அனைத்து அரசு பள்ளிகள் வகுப்பறைகளுக்கு தேவையான இருக்கைகள், மேசைகள், பீரோக்கள் ஆகிய தளவாட பொருட்களை வால்பாறை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சிவன் ராஜிடம் வால்பாறை எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி வழங்கினார்.

இந்த நிகழ்வில் நகர செயலாளர் மயில் கணேசன், 17 வது கவுன்சிலர் மணிகண்டன், சௌந்தராஜன், sks பாலு, சுடர் பாலு, மோகன், சண்முகம் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...