இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரை கைது செய்தனர்.
கோவை: கோவை பொள்ளாச்சி அருகே கடன் தர மறுத்த பெயிண்டரை சரமாரியாக தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி அருகே கிட்டசூராம்பாளையத்தை சேர்ந்தவர் 41-வயதான ராதாகிருஷ்ணன். பெயிண்டிங் தொழில் செய்து வருகிறார். இவரிடம், டி.கோட்டாம்பட்டியை சேர்ந்த 24-வயதான லோகேஷ் மற்றும் 24-வயதான பிரதீப் ஆகியோர், ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு சென்று கடன் கேட்டுள்ளனர்.
அப்போது தன்னிடம் தற்போது பணம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார். ஆனால், தொடர்ந்து ராதாகிருஷ்ணனிடம் இருவரும் பணம் கேட்டு தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக நேற்று அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த இளைஞர்கள் இருவரும், ராதாகிருஷ்ணனை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது. இதில், காயமடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுகுறித்து ராதாகிருஷ்ணன் கொடுத்த புகாரின் பேரில், மகாலிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, லோகேஷ், பிரதீப் ஆகியோரை கைது செய்தனர்.