சரவணம்பட்டி சர்க்கிள் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் ராஜீவ் காந்தியின் 31 வது நினைவு நாள் அஞ்சலி கூட்டம்!

நேற்று சரவணம்பட்டி சர்க்கிள் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் முன்னாள் பாரதப் பிரதமர் அமரர் ராஜீவ் காந்தியின் 31 வது நினைவு நாள் அஞ்சலி கூட்டம் நடந்தது.


கோவை: நேற்று காலை 10 மணி அளவில் சரவணம்பட்டி சர்க்கிள் காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் முன்னாள் பாரதப் பிரதமர் அமரர் ராஜீவ் காந்தியின் 31 வது நினைவு நாள் அஞ்சலி கூட்டம் நடந்தது.



இந்த கூட்டத்திற்கு கோவை மாமன்ற உறுப்பினர் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவருமான ஜீவி நவீன் குமார் தலைமை தாங்கினார்.



சர்க்கிள் தலைவர் இரகுராமன் வரவேற்புரை ஆற்றினார். இந்த நிகழ்ச்சியில் பயங்கரவாத தடுப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது.



பின்னர் முன்னாள் பாரத பிரதமர் கொலை வழக்கில் கைதான பேரறிவாளனை விடுதலை செய்ததை கண்டித்து வாயில் வெள்ளை துணி கட்டி போராட்டம் நடைபெற்றது.



இந்த கூட்டத்தில் எஸ் எஸ் குளம் வட்டாரத் தலைவர் நாகராஜ், மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் பழனிசாமி, செயலாளர் சாமுவேல் தாஸ் மற்றும் விவசாயிகள் பிரிவு பொதுச்செயலாளர் ராயல் வி சண்முகம், கணபதி அசோக்குமார், டிவிஷன் தலைவர்கள் கோபால், முருகேசன் மற்றும் நிர்வாகிகள், சுந்தரசாமி விவேகானந்தன், கனகராஜ், மருதாசலம், பாலு, கொங்கு கதிர்வேல், காசி, மையான், மூத்த தலைவர்கள் திரு எஸ் ஆர் சண்முகம், குட்டி என்கிற சிவகுமார், துரைசாமி, இடிகரை சிவகுமார், ரவிக்குமார், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள், மாநில செயலாளர் பிரேம்குமார், கவுண்டம்பாளையம் கோபி, பன்னீர்செல்வம், சுரேஷ், தமிழ்ச்செல்வன், தினேஷ், இடிகரை அருண், லீபன், பத்மா, ரேகா உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.





Newsletter

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...