ஆழியாறு அணையில் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு படையினர் ஒத்திகை பயிற்சி..!

ஆழியாறு அணையில் இறங்கிய வீரர்கள் தண்ணீரில் மூழ்கிய ஒருவரை மீட்பது குறித்து விரிவாக தத்ரூபமாக செய்து காட்டினர்.


கோவை: ஆழியாறு அணையில் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்பு படையினர் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது

கோவை தொப்பம்பட்டி மத்திய ரிசர்வ் படை பயிற்சி கல்லூரியில் பயிற்சி பெற்று வரும் 80 படை வீரர்கள் கொண்ட குழுவினர் ஐஜி வர்மா உத்தரவின் பேரில் கமாண்டோராஜேஷ்குமார், துணை கமாண்டோ ஹரிகுமார், சுனில் குமார் ஆகியோர் தலைமையில் வந்த படை வீரர்கள் ஆழியாறு அணையில்பேரிடர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர்.



இதில் இன்ஸ்பெக்டர் பிரபு ஆகியோர் தலைமையில் 8-பேர் கொண்ட அதிகாரிகள் பயிற்சி அளித்தனர். வீரர்களுக்கு வெள்ளத்தில் சிக்கியவர்களை எப்படி மீட்பது அந்த சமயத்தில் கையில் கிடைக்கும் காலி பாட்டில்கள் காளி டிரம் போன்ற மீட்பு கருவிகளை கொண்டு அவர்களை எப்படி மீட்பது நீரில் மூழ்கியவர்களை காப்பாற்றுவது போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டது.

ஆழியாறு அணையில் இறங்கிய வீரர்கள் தண்ணீரில் மூழ்கிய ஒருவரை மீட்பது குறித்து விரிவாக தத்ரூபமாக செய்து காட்டினர்.

Newsletter

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...