கோவையில் விஷ பாம்பு கடித்து பள்ளி சிறுவன் பலி – விடுமுறைக்கு தாத்தா வீட்டிற்கு வந்த போது ஏற்பட்ட சோகம்…!

கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.


கோவை: கோவையில் விஷப் பாம்பு கடித்து பள்ளி சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் வடிவேல்முத்து. இவரது மகன் மணிவேல் (12) கம்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் தற்போது பள்ளிக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், கோவை துடியலூர், டி.வி.எஸ் நகர் பகுதியில் உள்ள தனது தாத்தா வீட்டிற்கு கடந்த 2 நாட்களுக்கு முன் வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று வீட்டின் மொட்டை மாடியில் சிறுவன் பந்து வீசி விளையாடிக் கொண்டிருந்தாக தெரிகிறது. அப்போது பந்து மாடியில் இருந்து வீட்டின் அருகே உள்ள புதருக்கு விழுந்துள்ளது.

இதையடுத்து சிறுவன் மணிவேல் அந்த பந்தை எடுப்பதற்காக கீழே இறங்கி புதருக்கு சென்றுள்ளார். அப்போது பந்தை எடுத்த போது அங்கிருந்த விஷப்பாம்பு, சிறுவனின் கையில் கடித்துள்ளது.

இதையடுத்து சிறுவன் தனது வீட்டில் கூறியதையடுத்து, உடனடியாகவீட்டில் இருந்தவர்கள் மணிவேலை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

நேரம் ஆக, ஆக விஷம் ஏறியதால் அவர் ஆபத்தான கட்டத்திற்கு சென்றுள்ளார். இதனால் அவர் அதிதீவிர அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிறுவன் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

Newsletter

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...