திருவொற்றியூரில் இருந்து கோவை வந்த மருத்துவ மாணவி மீட்பு!

திருவொற்றியூரில் இருந்து கோவை வந்த மருத்துவ மாணவி பத்திரமாக தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளார்.


கோவை: கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் காட்டூர் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு ஒரு இளம்பெண் சந்தேகத்திற்கிடமாக அங்குமிங்கும் சுற்றிக்கொண்டு இருந்தார். இதனை பார்த்த போலீசார் அந்த இளம்பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த இளம்பெண் பெற்றோர் கண்டித்ததால் வீட்டை விட்டு வந்ததாக தெரிவித்தார். இதில் அதிர்ச்சி அடைந்த போலீசார் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

அப்போது அந்த மாணவி திருவொற்றியூர்சேர்ந்த 18 வயது மாணவி என்பதும், சென்னையில் உள்ள மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் மாணவியின் தந்தைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து தந்தை கோவை வந்துள்ளார். பின்னர் மாணவிக்கு அறிவுரை வழங்கி தந்தையிடம் போலீசார் பத்திரமாக ஒப்படைத்தனர்.

Newsletter

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...