தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு லட்சம் இலவச மின் இணைப்பு வழங்கியதில் மோசடி நடைபெற்றதாக கூறி விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: பல்லடம் மின் பகிர்மான கழக அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம், சூலூர் வட்டம், ஜே கிருஷ்ணாபுரம் கிராமம், சாலைப்புதூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்ட ஒரு லட்சம் இலவச வேளாண் மின் இணைப்புகள் வழங்காமல், அரசுக்கு தவறான தகவல்களை அளித்து தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சம்பந்தமே இல்லாத நபர்களை வைத்து புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்துள்ளார்.
பல்லடம் மின் பகிர்மான அலுவலகத்திற்கு உட்பட்ட சாலைப்புதூர் கிராமத்தில் மொத்தம் 330 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்க தேர்வாகியுள்ள நிலையில், முதற்கட்டமாக 217 பேருக்கு இணைப்பு வழங்கப்படும் எனவும் அதில் 192 பயனாளிகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டதாக இணையதளத்தில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
ஆனால் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இணைப்பு வழங்கப்படவில்லை. இந்த முறைகேடு குறித்து பல்லடம் மின்சார வாரிய அதிகாரிகளை கண்டித்தும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும், இணைப்பு கொடுக்கப்படாத அனைத்து உழவர்களுக்கும் உடனடியாக இணைப்பு வழங்க கோரியும் கோரிக்கைகள் நிறைவேறும் வரை பல்லடம் மின்சார வாரிய அலுவலகத்தின் முன்பு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என அறிவித்த நிலையில் கடந்த 3 நாட்களில் மட்டும் 73 விவசாயிகளுக்கு அவசர அவசரமாக மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று பல்லடம் மின் பகிர்மான அலுவலகத்தை முற்றுகையிட்டு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட செயற்பொறியாளர் ரத்தினகுமார் விவசாயிகளிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.

அப்பொழுது விவசாயிகள் தமிழக அரசுக்கு பொய்யான தகவல் மின்வாரிய அதிகாரிகள் அளித்துள்ளதாகவும், ஒரே எண் கொண்ட இணைப்புக்கு இருவருக்கு வழங்கியதாகக் கணக்கு காட்டப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என செயற்பொறியாளர் உறுதி அளித்தார்.

அனைத்து விவசாயிகளுக்கு உடனடியாக மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், எழுத்து பூர்வமாக அதனை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். செயற்பொறியாளர் இதற்கு சம்மதம் தெரிவித்ததை அடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.