கணவன் மனைவிக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக பச்சிளம் குழந்தையை ஓடும் ரயிலில் இருந்து வெளியே வீசி கொலை செய்த தந்தையை போலீசார் கோவையில் கைது செய்துள்ளனர்.
கோவை: கோவை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவு அழைத்த ஒரு பெண் ஒருவர் தன்னை தனது கணவர் அடித்துக் கொலை செய்ய முயன்றதோடு, அறையை பூட்டி விட்டுச் சென்றதாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக ராமநாதபுரம் பகுதியில் ரோந்து சென்ற போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு, போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கு பூட்டியிருந்த வீட்டில் காயங்களுடன் இருந்த பெண்ணை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்த போலீசார் அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.
முதல் கட்ட விசாரணையில் தென்காசி மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்தவர்கள் மாரிசெல்வம், கவிதா தம்பதியினர். பிரியாணி கடை நடத்தி வரும் மாரிசெல்வம் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்ததன் காரணமாக அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் கோவையில் பிரியாணி கடை ஒன்றை திறக்க வேண்டும் என கூறி கடந்த 30ஆம் தேதி தென்காசியில் இருந்து நிறைமாத கர்ப்பிணியான கவிதாவை அழைத்துக்கொண்டு கோவை வந்த மாரிசெல்வம், ராமநாதபுரம் பகுதியில் லாட்ஜ் ஒன்றில் அறை எடுத்து தங்கியுள்ளார்.
இந்நிலையில் அடுத்த நாள் கவிதாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டு அதன் காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்துள்ளது. மூன்று நாட்கள் சிகிச்சையில் இருந்த கவிதா கடந்த 3ஆம் தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் இருவரையும் அழைத்துகொண்டு மாரிசெல்வம் சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மீண்டும் கடந்த 13ம் தேதி நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி கோவை வந்துள்ளனர்.
கோவை நோக்கி ரயில் வந்து கொண்டிருந்த போது சந்தேகத்தின் காரணமாக மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், டிஎன்ஏ பரிசோதனை மூலம் நிரூபிப்பதாக கவிதா கூறியதாக தெரிகிறது. இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் மதுரைக்கும் திண்டுக்கல்லுக்கும் இடையே ரயில் வந்து கொண்டிருந்த நிலையில் கவிதாவின் கையிலிருந்த குழந்தையை பறித்த மாரிசெல்வம் ஓடும் ரயிலில் இருந்து பச்சிளம் குழந்தையை வெளியே வீசி எறிந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் கவிதாவை தாக்கிய மாரிசெல்வம் மீண்டும் ராமநாதபுரம் பகுதியில் உள்ள லாட்ஜுக்கு அழைத்து வந்துள்ளார்.
அங்கு நான்கு நாட்களாக அறையில் வைத்து கவிதாவை தாக்கிய நிலையில் நேற்று இரவு கவிதா மயங்கி உள்ளார். கவிதா மயங்கியதை பார்த்து உயிரிழந்து விட்டதாக கருதிய மாரிசெல்வம் அறையை பூட்டி விட்டு தப்பினார். இந்நிலையில் மயக்கம் தெளிந்த கவிதா, கோவை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்ததும் போலீசார் விரைந்து சென்று அறையில் காயங்களுடன் இருந்த கவிதாவை மீட்பு சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தப்பி ஓடிய மாரிசெல்வத்தை கைது செய்துள்ளதோடு, பச்சிளம் குழந்தை ரயிலில் இருந்து தூக்கி எறியப்பட்டது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.