கோவை சிறுமுகையில் தலைமைக் காவலர் தூக்கிட்டு தற்கொலை!

கோவையில் சிறுமுகை ஆலாங்கொம்பு பகுதியில் தலைமைக் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: தூத்துக்குடி மாவட்டம் விளாங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் பால்ராஜ். அவரது மகன் தாமோதரன் (41) தலைமைக் காவலர்.



இவர் தற்போது மேட்டுப்பாளையம் டி.எஸ்.பி.அலுவலகத்தில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். அவருக்கும் பிரியா என்பவருக்கும் கடந்த 14 வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆகி பிரேமிதா (13) என்ற மகளும், கார்த்திக் (8) என்ற மகனும் உள்ளனர். இவர் தற்போது தனது குடும்பத்தினருடன் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிறுமுகை ஆலாங்கொம்பு பகுதியில் வசித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களாக அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று பணி முடிந்து வீட்டிற்கு சென்ற தாமோதரன் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று காலை அவரது வீடு வெகுநேரமாக பூட்டப்பட்டிருந்தது. அக்கம் பக்கத்தினர் ஜன்னல் வழியாக பார்த்தபோது தாமோதரன் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக சிறுமுகை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்து விரைந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தலைமைக் காவலர் உடலை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் உயிரிழந்த தலைமைக் காவலர் குடும்ப பிரச்சினை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...

மருதமலை கோயில் உண்டியலில் ₹76.25 லட்சம் காணிக்கை

கோவை மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையில் ரூ.76.25 லட்சம், தங்கம், வெள்ளி மற்றும் பித்தளை...

கோவை பீளமேடு கொலை வழக்கு: 9 பேர் கைது; கத்தி, சுத்தியல் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்

கோவை பீளமேட்டில் சென்னை இளைஞர் நவீன் கொலை செய்யப்பட்ட வழக்கில், கோவை மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் தனிப்படைக...

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...